Connect with us

ஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

Corona (Covid-19)

ஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

இந்தியாவில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 911 ஆக இருந்தது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்னும் 3 தினங்களில் முடிய இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. என்பதே உண்மை. இந்நிலையில் ஊரடங்கை நீக்கினால் அது மேலும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் சில மாநிலங்கள் தாமாகவே ஊரடங்கு உத்தரவை இம்மாத இறுதி வரை நீட்டித்துள்ளன. தமிழகத்திலும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பாக தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒட்டு  மொத்தமாக நாட்டுக்கே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

பாருங்க:  எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல -கமல்ஹாசனுக்கு மோடி பதில்!

More in Corona (Covid-19)

To Top