கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

306

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்டியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மூலம் வைரஸ் தொற்று மேலும் பரவலாம் என்ற அச்சத்தில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியும் சிலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அரசு மருத்துவப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கும் என அறிவித்துள்ளது.

பாருங்க:  பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு - பாரதிராஜா கடும் சோகம்
Previous articleஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!
Next articleஎன்ன சிம்ரன் இதெல்லாம்?? சிங் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!!