பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களை நெட்டிசன்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1100 ஐ நெருங்கியுள்ளது. அதேப் போல அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 1934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவி கேட்க அதற்கு இந்திய வீரர்களான யுவ்ராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் உதவி அளித்திருந்தனர்.
இதற்காக அவர் இருவருக்கும் நன்றி சொல்ல இந்திய மக்களுக்காக எந்த உதவியையும் செய்யாமல் பாகிஸ்தான் மக்களுக்காக அவர்கள் நிதி அளித்துள்ளதாக நெட்டிசன்கள் அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் செயலில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக இரு தரப்பினரும் #ShameOnYuviBhajji, #IStandWithYuvi ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.