கொரோனா வைரஸ்: இந்திய வீரர்களின் சம்பளம் பிடிக்கப்படுமா?

கொரோனா வைரஸ்: இந்திய வீரர்களின் சம்பளம் பிடிக்கப்படுமா?

கொரோனா வைரஸால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1965 ஆக உள்ளது.

கொரோனாவால் இந்திய அணி விளையாட இருந்த பல கிரிக்கெட் தொடர்கள் தள்ளிப்போயுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. போட்டிகள் நடக்காததால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகளவிலான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலமையை சமாளிக்க வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதை பிசிசிஐயின் பொருளாளர் மறுத்துள்ளார். அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.