Corona (Covid-19)
ஆஸ்திரேலியா அறிவித்த முக்கிய அறிவிப்பு – டி 20 உலகக்கோப்பைக்கும் ஆபத்து!
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பைத் தொடர் நடப்பது சந்தேகமாகியுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசு கொரொனா வைரஸை தடுக்கும் விதமாக இன்னும் 6 மாதத்துக்கு வெளிநாட்டவர் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டி 20 உலகக்கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.