Connect with us

சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை – டிவிட்டரில் மகிழ்ச்சி !

தமிழ் விளையாடு செய்திகள்

சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை – டிவிட்டரில் மகிழ்ச்சி !

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சமீபகாலமாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வருகின்றார். அதனால் உள்ளூர் தொடர்களிலும், ஐபிஎல் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அவரது குடும்பத்திற்கு புதுவரவாக இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ரெய்னா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இப்போது மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த தனது மகிழ்ச்சியை ‘எல்லாவற்றினுடைய தொடக்கம். எங்கள் மூத்த மகன் ரியொ ரெய்னாவின் தம்பி வருகைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவன் எல்லைக்கு அப்பாற்பட்டு, அமைதியும், புதுமையும்,  செழுமையும் எல்லோரது வாழ்க்கையிலும் கொண்டு வருவான்’ எனக் கூறியுள்ளார்.

பாருங்க:  ஜி வி பிரகாஷ் தம்பதிக்கு பெண் குழந்தை! திரையுலகினர் வாழ்த்து!

More in தமிழ் விளையாடு செய்திகள்

To Top