இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் போது வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடுகின்றது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன் படி தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அறிவித்துள்ளாதவது ‘இந்திய தொடரின் போது எங்கள் வீரர்கள் இந்திய வீரர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள். கைகுலுக்குவதால் வைரஸ் கிருமிகள் பரவும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே அதை தடுக்கும் பொருட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணியும் இதுபோல கைகுலுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.