சமூகவலைதளத்தில் இந்தியில் பேசிக்கொண்டு இருந்த ரோஹித் ஷர்மா ரசிகர்களை அவமதிக்கும் விதத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மொழி பேதமின்றி கொண்டாடப்படும் ஒரு விஷயம் கிரிக்கெட். எல்லா மொழி பேசும் மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வீரர்கள் ஆங்கிலத்திலேயெ உரையாடுவது வழக்கம். கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இதையடுத்து சமூகவலைதளமான டிவிட்டரில் இந்திய தொடக்க ஆட்டக்காரரும் வேகப் பந்து வீச்சாளருமான பூம்ராவும் டிவிட்டரில் இந்தியில் பேசி உரையாடிக் கொண்டு இருந்தனர். இது இந்தி பேசாத ரசிகர்களுக்குப் புரியாது என்பதால் ரசிகர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுமாறுக் கேட்க, அதற்கு ரோஹித் ஷர்மா, நாங்கள் இந்தியர்கள் அதனால் இந்தியில்தான் பேசுவோம் என்ற பதிலை அளித்தார். ஆங்கிலம் எல்லாம் தொலைக்காட்சி பேட்டிகளுக்குதான் எனக் கூறினார்.
ரோஹித் ஷர்மாவின் இந்த பதில் இந்தி பேசாத ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.