தோனியின் தலைமையில்தான் யுவி சிறப்பாக விளையாடினார்! முன்னாள் வீரரின் சர்ச்சைக் கருத்து!

205

தோனி மற்றும் கோலி தனக்கு ஆதரவளிக்கவில்லை என யுவ்ராஜ் கூறியிருந்த நிலையில் அதற்கு மாற்றான கருத்தை நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் அணிக்குள் போராடி நுழைந்தார்.

ஆனாலும் அவரால் முன்பு போல அணியில் நீடிக்க முடியவில்லை. அதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன். அதன் பின் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரும் தலைமையேற்றனர். ஆனால் என் நினைவுகள் கங்குலி காலத்திலேயே இருக்கின்றன.  அவரிடம் கிடைத்தது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமோ அல்லது கோலியிடமோ கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் யுவ்ராஜின் கருத்தை மறுக்கும் விதமாக ஆஷிஷ் நெஹ்ரா தனது ‘தோனியின் கேப்டன்சியின் கீழ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும்  2011 உலகக்கோப்பை தொடர்களில் யுவ்ராஜ் சிறப்பாக விளையாடினார். அதே போல கேன்சரிலிருந்து மீண்டு வ்ந்த அவர் எப்படி தோனியின் கீழ் வெளுத்துக் கட்டினார் என்பதையும் நாம் அறிவோம். யுவ்ராஜ் தனக்கான சிறந்த கேப்டனை சொல்ல முடியும் என்றாலும் என்னைப் பொருத்தவரை தோனி தலைமையில்தான் அவர் சிறப்பாக விளையாடினார்’ எனக் கூறியுள்ளார்.

பாருங்க:  ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி மனு

நெஹ்ரா கூறியது போலவே தோனியின் தலைமையின் கீழ்தான் அவர் அதிக ரன்களைக் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபேட்டை பட நாயகியின் குவாரண்டின் மெசேஜ்
Next articleஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்