இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட்டரான ஜோஹிந்தர் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை வெற்றிக்காக முக்கியமானக் காரணமாக இருந்தவர்களில் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மாவும் ஒருவர். அதன் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் போட்டிகளிலும் சில போட்டிகளில் விளையாடிய அவர் பின்னர் ஓய்வு பெற்று. ஹரியானா மாநில காவல்துறையில் டி எஸ் பி யாகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
தற்போது கொரோனாவுக்கு எதிராக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஹரியானா மாநிலத்தில் களப்பணியில் இறங்கியுள்ளார். இது சம்மந்தமாக அவரதுப் புகைப்படத்தைப் பகிர்ந்த ஐசிசி ‘2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோ… 2020 ஆம் நிஜ ஹீரோ… கிரிக்கெட்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் காவல்துறையில் இணைந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ‘ என அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.