Corona (Covid-19)
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்து ! பிசிசிஐ அதிரடி !
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நேற்று தர்மசாலாவில் நடக்க இருந்த நிலையில் மழைக் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைப்பதாக முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் படி ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.