இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருகான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்தியா வந்து தென் ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.
இதில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகார் தவான் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நியுசிலாந்து தொடரில் வாய்ப்புக் கொடுத்தும் சோபிக்காத மயங்க் அகர்வால், கேதார் ஜாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நீக்கியுள்ளனர். காயத்தில் இருந்து மீளாத ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணி :-
ஷிகர் தவண், பிரித்வி ஷா, விராட் கோலி(கேப்டன்), கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் ஷைனி, சுப்மான் கில்.