அவருக்கு அட்வைஸ் மட்டும் போதும் – சஞ்சய் மஞ்சரேக்கருக்கு முதல் ஆதரவு !

அவருக்கு அட்வைஸ் மட்டும் போதும் – சஞ்சய் மஞ்சரேக்கருக்கு முதல் ஆதரவு !

வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஆதரவாக சந்திரசேகர் பண்டிட் பேசியுள்ளார்.

பிசிசிஐ வரணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சி எஸ் கே அணியும் ரசிகர்களும் அதைக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சி எஸ் கே டிவிட்டரில் இனிமேல் இந்த துண்டு துணுக்கோட வர்ணனையைக் கேட்க வேண்டிய தேவையிருக்காது’ எனத் தெரிவித்து ஒரு டிவிட்டை போட்டுள்ளது. அந்த டிவிட்டைப் பகிரும் ரசிகர்கள் மஞ்சரேக்கரைக் கேலி செய்யும் விதமாக பல கமெண்ட்களை இட்டு வருகின்றனர்.

சி எஸ் கே மற்றும் ரசிகர்களின் இந்த கொண்டாத்துக்குக் காரணம், ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையின் போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தும் மற்ற அணிகளை மட்டம் தட்டியும் பேசுவதுமே ஆகும். மேலும் அவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கடந்த ஆண்டு கேலி செய்த நிலையில் இப்போது அதே மாதிரி அவரைக் கலாய்த்துள்ளது சி எஸ் கே.

இந்நிலையில் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சந்திரசேகர் பண்டிட். அவர் சஞ்சய் மஞ்சரேக்கர் விஷயத்தில் பிசிசிஐ அறிவுரை மட்டும் வழங்கி இருக்கலாம். நீக்கம் குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.