தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் நாடு இருக்கும் நிலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்காது எனத் தெரிகிறது.
இந்நிலையில் தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக இந்தியாவைச் சேர்ந்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.