ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு !

203

இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது.

இது சம்மந்தமாக அணியின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் கொரோனா வைரஸ் பீதி கம்மியாகியுள்ளது.

பாருங்க:  ஐபிஎல் பற்றி மறந்துவிடுங்கள்- சவுரவ் கங்குலி பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
Previous articleயெஸ் பேங்க் சர்ச்சையால் சிக்கலில் கரூர் வைஸ்யா பேங்க் – வாடிக்கையாளர்களுக்கு உறுதி !
Next articleவிஷால் சிறந்த நடிகர்…. கேமராக்குப் பின்னால் – பிரபல இயக்குனர் கலாய் !