Corona (Covid-19)
ஆளில்லாத மைதானம்… சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் – பீல்டருக்கு ஏற்பட்ட சோகம் !
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி மைதானத்தில் ஆட்கள் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கிரிக்கெட்டையும் அது விட்டு வைக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் கூடினால் வைரஸ் பரவுவது அதிகமாகும் என்பதால் ஐபிஎல் போன்ற தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் மைதானத்துக்கு ரசிகர்களை அனுமதிக்காமல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதனால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் பவுண்டரிக்கு செல்லும் பந்துகளை எடுக்க வீரர்களே எடுக்க செல்ல வேண்டியுள்ளது. நியுசிலாந்து வீரர் அடித்த் சிக்ஸர் ஒன்று பார்வையாளர்கள் அமரும் இடத்துக்கு செல்ல, அங்கு சென்ற ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்டின் ஆகர் பந்து கிடைக்காமல் சிறிது நேரம் தேடியலைந்தார். அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.