Corona (Covid-19)
தோனியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் கொரோனாதான்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அரசும் பல தன்னார்வலர்களும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இதையடுத்து விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி கொரோனா நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ளார். உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் மக்கள் தன் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது வெறும் ஒரு லட்சம் மட்டும் கொடுப்பதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலகளவில் உள்ள கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளிட்ட பலரும் கோடிக்கணக்கில் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
M S Dhoni trolled by netizens