Connect with us

விக்ரம் பட விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட்

Entertainment

விக்ரம் பட விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட்

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”.  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது.

தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து  ரெட் ஜெயன்ட் மூவீஸ், “தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளது.

பாருங்க:  பிறந்த நாள் விழாவை விக்ரமுடன் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்

More in Entertainment

To Top