தமிழ் சினிமா செய்திகள்
வடிவேலு இல்லாம போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – நடிகரிடம் சொல்லிய விஜயகாந்த்!
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வடிவேலுவை மீண்டும் நடிக்க சொல்லி விஜயகாந்த் கூறியதாக நடிகர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுப்பாராவ் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் வடிவேலு மற்றும் விஜயகாந்துக்கு இடையிலான பிரச்சனைக் குறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த நேர்காணலி ‘என்னை வடிவேலு அண்ணன் என்றுதான் அழைப்பார். 2011 தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் அண்ணனை திட்டியது தொடர்பாக நான் வடிவேலு கிட்ட கோபப்பட்டேன். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவரா இருந்த விஜயகாந்தை நான் சந்தித்த போது ’வடிவேலுவை நடிக்க சொல்லுடா… அவர் இல்லாமல் போர் அடிக்குது’ எனக் கூறினார். இதை நான் வடிவேலுவிடம் சொன்னபோது ஆச்சர்யப்பட்டர்.
நடிகர் வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே 2011 ஆம் ஆண்டுகாலத்தில் பிரச்சனை உருவானதை அடுத்து அவர் விஜயகாந்துக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயகாந்தை குடிகாரர் என்று கிண்டல் செய்தது பரபரப்பைக் கிளப்பியது.
