மார்ச் 27 க்குப் பின் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை – அதிர்ச்சியில் விஜய் மற்றும் சூர்யா !

99

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மார்ச் 27 க்குப் பிறகு புதிய படங்களை ரிலீஸ் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து வடமாவட்டங்களின் விநியோகஸ்த சங்க தலைவர் டி ராஜேந்தர் இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தமிழகத்தில் மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின் எந்த புதிய படத்தையும் ரிலீஸ் செய்வதில்லை என அறிவித்துள்ளனர்.

அவர்களின் இரு கோரிக்கைகள் :

1.விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் 10% TDS வரியை  ரத்து செய்யவேண்டும். 2.திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரி அல்லாமல் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதிக்கப்படும் LBT (8%) சதவீத கேளிக்கை வரியை நீக்கவேண்டும்.

விநியோகஸ்தர்களின் இந்த அறிவிப்பால் ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 16 ஆகிய தேதிகளில் ரிலீஸாவதாக இருந்த மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

பாருங்க:  லோகேஷின் திருப்தி அடையாத ரஜினி! கமல் எடுத்த திடீர் முடிவு!