அஜித் ஒரு தமிழ்நாட்டு வெள்ளைக்காரர் – கிரீடம் வைத்த அம்மா நடிகை !

169

நடிகர் அஜித்துக்கு அம்மாவாக கிரீடம் படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் அவரை வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். அந்த அளவுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் அம்மா வேடத்தில் சீட் போட்டு உட்கார்ந்தவர் அவர். விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் முதல் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்கள் வரை அனைவருக்கும் அம்மாவாக நடித்து முடித்துவிட்டார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் பற்றி பேசிய அவர் அஜித்தை மட்டும் எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசியுள்ளார். அஜித்துடன் அவர் கிரீடம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார்.

அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், அஜித்தைப் பற்றிய தனது கற்பிதங்களுக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு  ‘நான்…  அவர் ஒரு அழகு சுந்தரன்…செம கெத்தாக, மாஸாக இருப்பார்…. ஸ்பாட்டில் அவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக அஜித் ஒரு குழந்தை மாதிரி நடந்து கொண்டார். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் என்றுதான் சொல்லவேண்டும்… அந்த அளவிற்கு அழகானவர் அவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  2020ல் அதிகமாக டுவிட் செய்யப்பட்டவர் இவராம்