Entertainment
படத்தின் வெற்றிக்காக காசியில் வழிபாடு செய்த ஆர் ஆர் ஆர் படக்குழுவினர்
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆர் ஆர் ஆர்.
ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் தேஜா இருவரும் இணைந்து கலக்கியுள்ள இப்படத்தில் காட்சிகள் மிக பிரமாண்டமான காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
பாகுபலிக்கு பிறகு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து காசியில் நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்வான கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டு எஸ்.எஸ் ராஜமவுலி, ராம்சரண், மற்றும் ஜூனியர் என் டி ஆர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
