குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்த ரியோ! என்ன குழந்தை தெரியுமா ?

226

சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்துள்ள நடிகர் ரியோவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சன் மியுசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ ராஜ். அந்த தொடரில் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களைக் கவர்ந்திழுத்த அவருக்கு பின்னர் விஜய் டிவியின் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் இப்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் அவருக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது. இதை தனது சமூக வலைதளத்தில் அவரே உறுதி செய்து’’என்னை ஆள தேவதை பிறந்துள்ளாள். தாயும் சேயும் நலம்’ எனத் தெரிவித்துள்ளார். அவருக்கும் ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இப்போது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  அப்துல்கலாம் அண்ணன் மறைவு குறித்து விவேக் அஞ்சலி
Previous articleநான் சமூகவலைதளத்துக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது – அஜித் கடிதத்தால் குழப்பு !
Next articleவீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து – கமலின் விசாரணைக்கு எதிராக சர்ச்சை போஸ்டர் !