Published
3 years agoon
By
Vinoரஜினி அடுத்ததாக சந்திரமுகி படத்தின் பார்ட் 2 வில் நடிக்க இருக்கிறார் என்றும் அதை இயக்குனர் பி வாசு இயக்க இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.
ரஜினி கட்சி ஆரம்பிப்பார் அதைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் அடுத்தடுத்து அவர் நடிக்கும் பட்த்தின் அறிவிப்புகள்தான் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்தே படப்பிடிப்பு கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகராகவும், நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்ட ராகவா லாரன்ஸ் ரஜினியுடன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அது சந்திரமுகி படத்தின் பார்ட் 2 என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இந்த பாகத்தையும் இய்க்க இருக்க சன் பிக்சர்ஸ் அந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதை ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.