Connect with us

பிகில் திரைப்படம் அட்லிக்காக ஓடவில்லை – பிரபல தயாரிப்பாளர் கருத்து !

bigil

தமிழ் சினிமா செய்திகள்

பிகில் திரைப்படம் அட்லிக்காக ஓடவில்லை – பிரபல தயாரிப்பாளர் கருத்து !

கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் வெற்றி பெற்றது நடிகர் விஜய்க்காக மட்டும்தான் என தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த  திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் கடந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான கேயார், பிகில் திரைப்படம் வெற்றி பெற்றது குறித்து பேசியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில் ‘பிகில் திரைப்படம் விஜய் எனும் நடிகருக்காகதான் ஓடியது. அந்த வெற்றியில் அட்லிக்கு எந்த பங்கும் இல்லை. அவர் சுமாரான படம் கொடுத்தாலும் சூப்பர் ஹிட் ஆகும் என பிகில் நிரூபித்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார். இது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

பாருங்க:  அட்லி ஷாருக்கான் இணையும் படத்தில் பிரியாமணியும் இணைகிறார்

More in தமிழ் சினிமா செய்திகள்

To Top