Published
3 years agoon
By
Vinoபாலிவுட் தயாரிப்பாளரும் ஷாருக் கானின் நண்பருமான கரிம் மொரானியின் மகள் ஷாஜா மொரானிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4000-ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஷாருக் கான் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கரீம் மொரானி. இவரின் மகள் சமீபத்தில்தான் ஷாஜா மொரானி ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். முதலில் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் நேற்று அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஷாஜா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஷாஜாவின் குடும்பத்தார் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.