Entertainment
பாகிஸ்தான் பனிப்பொழிவு 19 பேர் பலி
பாகிஸ்தான் பனிப்பொழிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி கொண்ட வாகனங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் 19 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மலைப்பிரதேசமான முர்ரீ யில் செவ்வாய் கிழமை முதல், கடும் பனிப்பொழிவு நிலவியதால் அதை ரசிப்பதற்காக ஒரு லட்சம் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது சாலையில் கொட்டியப் பனியால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கார்கள் ஸ்தம்பித்து நின்றன. உறையும் குளிரால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு கார்களில் இருந்த சுற்றுலா பயணிகள் 19 பேர் தொடர்ந்து கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
