நயன்தாராவின் உதவி…. ஆர் கே செல்வணி நன்றி அறிக்கை !

187

தமிழ் சினிமாவின் தொழிலாளர்களுக்கான நிதியுதவி அளித்துள்ள நயன்தாரா மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்யும் விதமாக ஆர் கே செல்வமனி நன்றி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது.  இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்திருந்தனர். இதையடுத்து இப்போது நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்) என நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்), நடிகர் சூரி – 8 அரிசி மூட்டைகள், மனோபாலா 10 அரிசி மூட்டைகள் என பொருட்களாக அளித்துள்ளனர்.

பாருங்க:  சிம்புவுடன் மீண்டும் இணையும் நடிகை ஹன்சிகா?

இதையடுத்து நடிகை நயன்தாரா தொழிலாளர்களுக்காக 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Previous articleஅப்பா கூடயிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
Next articleநடிகர் சூரி வீட்டின் குவாரன்டைன் பரிதாபங்கள்