விஜய் சொன்ன வார்த்தை … டிவிட்டரில் ட்ரண்ட் செய்யும் முரட்டு ரசிகர்கள்!

250

நேற்று நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய் சொன்ன நண்பர் அஜித் என்ற வார்த்தையை டிவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவுக்கு வழக்கத்திற்கு மாறாக கோட் சூட் உடையில் வந்து அசத்தினார் விஜய். இதன் ரகசியம் குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டபோது ‘எல்லா விழாக்களுக்கும் சுமாரான உடைகளில் செல்வதாக என்னுடைய உடை வடிவமைப்பாளர் பல்லவி சலித்துக்கொண்டு இந்த கோட்டை கொடுத்தார். நானும் நண்பர் அஜித் போல செல்லலாமே என கோட் சூட் அணிந்து வந்தேன்’ எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி அதிரவைத்தனர்.

இந்நிலையில் விஜய் சொன்ன அந்த நண்பர் அஜித் என்ற வார்த்தை டிவிட்டரில் ட்ரண்ட் ஆகியுள்ளது. மேலும் இதை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் சேர்ந்து செய்து வருகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம். எப்படியோ இன்னும் கொஞ்சம் நாளைக்கு டிவிட்டர் உலகம் அமைதியாக இருக்கும்.

பாருங்க:  2020ல் அதிகமாக டுவிட் செய்யப்பட்டவர் இவராம்
Previous articleசஞ்சய் மஞ்சரேக்கரை வைத்து செய்யும் சி எஸ் கே – ஏன் இந்த கொல வெறி ?
Next articleஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு – லோகேஷ் சொன்ன சீக்ரெட் !