Entertainment
கவிஞர் பிறைசூடன் மரணம்
தமிழில் 80, 90களில் ஆரம்பித்து தற்போது வரை புகழ்பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் பிறைசூடன்.
இவர் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர்.
இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக
தென்றல்தான் திங்கள்தான்
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே
போடா போடா புண்ணாக்கு
தாய் அறியாத தாமரையே
நூறு வருஷம் இந்த மாப்பிளையும்
மீனம்மா மீனம்மா
நடந்தால் இரண்டடி
வேறு வேலை உனக்கு இல்லையே
உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள கவிஞர் பிறைசூடன் இன்று மறைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
