மி டூ வில் சிக்கிய சினிமா தயாரிப்பாளருக்கு கொரோனா! சிகிச்சைக்குப் பின் சிறையில்!

212

அமெரிக்காவின் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் கொரோனா சிகிச்சைக்குப் பின் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். இந்நிலையில் தன்னிடம் வாய்ப்புக் கேட்பவர்கள் மற்றும் தன் படத்தில் நடிப்பவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது பிரபல நடிகையான ஏஞ்சலீனா ஜோலி உள்ளிட்டவர்கள் புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து நியுயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் குணமடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பாருங்க:  எய்ட்ஸ் நோய் தற்காத்துக்கொள்ள சிம்ரனின் அறிவுரை
Previous articleஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!
Next articleவீரர்களின் சம்பளப் பாக்கியை மொத்தமாக கொடுத்த பிசிசிஐ!