நிஜ வாழ்க்கையில் விந்துதானம் செய்வீர்களா ? நடிகரை தெறிக்கவிட்ட கேள்வி !

188

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நிஜ வாழ்க்கையில் விந்துதானம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வளரும் இளம் ஹேண்ட்ஸம் ஹீரோக்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். பிக்பாஸ் மூலம் பிரபலமான அவர், நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் இளைஞர்களிடம் கவனம் ஈர்த்து வெற்றி பெற்றது. அதையடுத்து வரிசையாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடி நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் நடிப்பில் அடுத்ததாக இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்கி டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபு என்ற படம் ரிலிஸாக உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் விந்துதானம் செய்யும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளின் பற்றியது. இது சம்மந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் ஹரிஷிடம் ஒரு தொகுப்பாளர் ‘நிஜ வாழ்க்கையில் இதுபோல விந்துதானம் செய்யும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்ற்ய் செய்வீர்களா?’ எனக் கேட்டார்.

அதற்கு ஹரிஷ் கல்யாணோ ‘அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் பாஸ்’ என சொல்லி வெட்க சிரிப்பு சிரிக்கிறார் ஹரிஷ். இந்த படம் மார்ச் 13 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விவேக் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாருங்க:  அபெக்ஸ் கம்பெனியில் செளந்தர்யா கொண்டாடிய ஆயுத பூஜை