Entertainment
நாளை குருப்பெயர்ச்சி- முழு விவரம்
வழக்கமாக குரு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஒரு கிரகம் விட்டு மற்றொரு கிரகம் மாறுவார். இந்த முறை 6 மாதத்திற்குள் வேறு கிரகம் மாறுகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாளை ஏப்ரல் 14 அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்.
இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, கும்பம், விருச்சிகம் ராசியினருக்கு நன்மை உண்டு. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம்,மீன ராசியினர் பரிகாரமாக குருபகவானை வழிபட வேண்டும்.
தமிழ் நாட்டில் குருபகவானுக்கென்று சில விசேஷமான கோவில்கள் உள்ளன அவை, சென்னை பாடி சிவன் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் அருகில் உள்ள குரு கோவிந்த வாடி, கோவில்களை சொல்லாம்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி, ஸ்வாமி மலை முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்றவையும் குரு ஸ்தலம்தான் அங்கும் வழிபடலாம்
மகான்களின் சமாதிகளும் குரு அந்தஸ்தை உடையவைதான் அதனால் அங்கும் சென்றும் வழிபடலாம்.
