Published
3 years agoon
By
Vinoதுப்பறிவாளன் விஷயத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் பலரும் மிஷ்கினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த படத்துக்காக அதிக சம்பளம் கேட்டது மற்றும் செலவுகளை அதிகமாக்கியதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதனால் அவருக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் கொடுக்க வேண்டாம் எனவும் சொல்வது மாதிரி விஷால் தரப்பில் கடிதம் ஒன்று வெளியானது.
இந்நிலையில் நேற்று இது குறித்து பேசிய மிஷ்கின் ‘ இதுவரை நான் 13 கோடி செலவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். அதற்கான கணக்கைக் காட்ட சொல்லுங்கள். நானும் என் தம்பியும் இது சம்மந்தமாக விஷாலிடம் பேசச் சென்ற போது என் தாயை வேசி என்றார்கள். அதைத் தட்டிக்கேட்ட என் தம்பியை அடித்தார்கள். நான் மூன்று வருடமாக விஷாலை என் தம்பியாக நினைத்ததால் இதுவரை அமைதியாக இருந்தேன்.
ஆனால் இனிமேல் உனக்கு ஆப்பு இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் உன்னை நான் காப்பாற்றி வந்தேன். இனிமேல் உன்னிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மிஷ்கினுக்கு ஆதரவாக திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மிஷ்கினுக்கு ஆதரவாக ‘உங்களை நம்புகிறோம். நீங்க ரெடின்னா… நாங்களும் ரெடி’ என அவருடன் படம் பண்ணுவது பற்றி கூறினார். அதே போல இப்போது இயக்குனர் மீரா கதிரவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘விஷால் ஒரு மகா நடிகன். கேமிராவுக்கு முன்னால் அல்ல..பின்னால்.. அனுபவத்தில் சொல்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி கொடுகா- விஷால் தந்தையின் மகிழ்ச்சி
விஷால் நடித்து வரும் பான் இந்தியா படம் லத்தி- ரிலீஸ் தேதி அறிவிப்பு
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்
நடிகர் சங்க தேர்தல் விஷால் வெற்றி- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து
சிம்பு வழக்கு- நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி
வீரமே வாகை சூடும் படம் எப்படி உள்ளது