தனுஷின் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட சகோதரி !

238

தனுஷ் சினிமாவின் தவிர்க்க முடியாத சினிமாக் குடும்பமாக தனுஷ் குடும்பம் இருந்து வரும் நிலையில் தங்கள் குடும்பப் புகைப்படத்தை அவரது சகோதரி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனாக தனுஷ் நடிகராகவும் மற்றொரு மகனான செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இல்லாமல் கஸ்தூரி ராஜாவுக்கு விமலா, கார்த்திகா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனுஷின் சகோதரி தங்களது குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஊரடங்கு காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் கஸ்தூரி ராஜாவின் குலதெய்வக் கோவிலில் தனுஷின் அப்பா , அம்மா , அண்ணன் செல்வராகவன், அக்கா விமலா, கார்த்திகா , ஐஸ்வர்யா , அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா, செல்வராகவன், அவரின் மனைவி கீதாஞ்சலி, குழந்தைகள் மற்றும் விமலா, கார்த்திகா ஆகியோரின் கணவன்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த குடும்பமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  கமல், தனுஷ், ஷங்கர் – சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி!