Connect with us

அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்

தமிழ் சினிமா செய்திகள்

அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி – புதிய படத்தின் அப்டேட்

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டுயுள்ளார். இவரின் கால்ஷீட்டுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை காத்துருப்பார்கள், சரியாக சொல்லப்போனால் 2020வரை இவரின் படங்கள் வரிசை கட்டியுள்ளது.

அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் “சாய்ரா நரசிம்ம ரெட்டி” என்ற சரித்திர படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா இவரின் எதார்த்த நடிப்பை ரசித்து இவருக்காக சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. அதன்படி தெலுங்கில் விஜய் சேதுபதி புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் STYLISH STAR அல்லு அர்ஜுன்னுடன் MAKKAL SELVAN விஜய் சேதுபதி வில்லனாக கலக்கவுள்ளார். தற்காலிகமாக ஏஏ20 #AA20என்று பெயரிடப்பட்டுள்ள இதில் ராஷ்மிகா(Rashmika Mandanna) நாகியாக நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

பாருங்க:  சிரஞ்சீவி ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் டிரெய்லர்

More in தமிழ் சினிமா செய்திகள்

To Top