கும்பலாக வந்து தாக்கிய நபர்கள்! என்ன நடந்தது? வீடியோ வெளியிட்ட நடிகர்!

446

நடிகர் ரியாஸ் கான் தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது கூட தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பலரும் இதைப் பின்பற்றுவதில்லை. இதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் வீட்டின் முன்னர் ஒரு கும்பல் கூட்டமாக நின்றுள்ளது. இதுபோல கும்பலாக நின்றால் வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக ரியாஸ்கான் அவர்களிடம் எடுத்துக் கூற அதைக் காதில் வாங்காத அந்த கும்பல் அவரிடம் சண்டைக்கு வந்துள்ளனர். மேலும் அதில் ஒரு சிலர் ரியாஸ் கானைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இது சம்மந்தமாக ரியாஸ்கான் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் இதுபற்றி தற்போது வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘நான் என் வீட்டுக்கு முன் கும்பலாக நின்றவர்களிடம் சென்று, இப்படி நிற்பது உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் ஆபத்து. அதனால் கலைந்து செல்லுங்கள் என்றேன். ஆனால் அவர்களோ நாங்கள் காற்று வாங்க வந்தோம் எனக் கூறினர். அப்படி என்றால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று காற்று வாங்குங்கள் எனக் கூறியதற்கு… நீங்கள் நடிகர் என்பதை எங்களிடம் காட்டவேண்டாம் என்றதோடு என்னை தாக்க ஒருவர் முயன்றார். அவரின் அடி என் தோள் பட்டையில் விழ, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்’ எனக் கூறியுள்ளார்.

பாருங்க:  14 கோடி பேர் பார்த்த மாஸ்டர் படத்தின் டீசர்

ரியாஸ்கான் அளித்த புகாரின் பேரில் அந்த கும்பலைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Previous articleயாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !
Next articleஐபிஎல் பற்றி மறந்துவிடுங்கள்- சவுரவ் கங்குலி பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!