நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட போஸ்டர் என்று ஒட்டப்பட்டதால் பரபரப்பு உருவானது.
மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் தனிமப்படுத்த பட்ட வீடு என்பதை அறிவிக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஸ்டிக்கரை ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இதுபோன்ற போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலின் வீட்டின் முன் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. கமல், வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று வரவில்லை என்பதால் ஏன் அந்த போஸ்டர் அங்கு ஒட்டப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் உள்ள கையெழுத்திலும் சில குழப்பங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் அந்த ஸ்டிக்கர் கிழிக்கப்பட்ட நிலையில் நடிகை கௌதமி வீட்டில் ஒட்டுவதற்குப் பதிலாக கமல் வீட்டில் ஒட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கௌதமி கமல் வீட்டில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாஸ்போர்ட்டில் கமலின் வீட்டு முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.