Latest News
இன்று பட்ஜெட் தாக்கல்- பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்
2022 மற்றும்2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் தாக்கல் என்பதால் அனைவரும் பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
இதில் எடுக்கப்பட்ட சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனிமேல் இந்தியாவுக்கு என்று தனியாக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பணத்துக்கு என்று புதிய மத்திய வங்கி, 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி சேவை மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திவால் ஆன நிறுவனங்களை மூட அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6மாதமாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
