Corona (Covid-19)
தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரொனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 738 ஆக இருந்தது.
இதனால் மேலும் இரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என மருத்துவர்கள் குழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.