நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 புதிய நோயாளிகள் – 100 ஐ தாண்டியது தமிழ்நாடு!

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 புதிய நோயாளிகள் – 100 ஐ தாண்டியது தமிழ்நாடு!

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1100 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று காலை வரை 67 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மதியம் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில் திடீரென நேற்று இரவு தமிழகத்தில் மேலும் 50 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக ‘டெல்லியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இதுவரை 515 கண்டறியப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1131 பேர் கலந்துகொண்டுள்ளனர்.’ இந்த செய்தியானது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.