தமிழக பாஜக தலைவராக புதிதாகப் பதவியேற்றுள்ள எல் முருகன் காஞ்சி சங்கரமடத்தில் அவமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பாஜக தலைமைக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் எல் முருகன் தமிழகத்தில் பலரை சந்தித்து வாழ்த்துகளையு பெற்று வருகிறார். அதன் ஒரு கட்டமாக காஞ்சி சங்கரமடத்துக்கு சென்று மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து ஆசி வாங்க சென்றார். அப்போது தன் அறையில் அவரை சந்தித்த விஜயேந்திரர் முருகனை நிற்கவைத்தே பேசியுள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.