Latest News
சாலையில் சென்றவர்களுக்கு முக கவசம் கொடுத்த முதல்வர்
கொரோனா தொற்றின் நீட்சியாக மூன்றாவது அலை என சொல்லக்கூடிய ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினும் நேற்று சிறார்களுக்கான தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் கொரொனா விதிமுறைகளை மீறி சாலையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களை கோட்டையில் இருந்து சென்ற முதல்வர் ஸ்டாலின் பார்த்து அவர்களுக்கு மாஸ்க் கொடுத்தார்.
இப்படி மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.