Connect with us

அன்புத்தளபதிக்கு அண்ணன் சொன்ன வாழ்த்து!…பரபரப்பை உண்டாக்கிய பதிவு!…

Seeman Vijay

Latest News

அன்புத்தளபதிக்கு அண்ணன் சொன்ன வாழ்த்து!…பரபரப்பை உண்டாக்கிய பதிவு!…

பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ – மாணவியரை பாராட்டி, பரிசளித்து, ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விழாவை இன்று சென்னையில் நடத்தினார் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய். இதில் தமிழகம் முழுவதுமிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் மாணவ – மாணவர்களுக்கு போதை என்னும் தீயப்பழக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கினார், அதோடு எப்படி வாழ வேண்டும் என வழிகளையும் கற்றுக்கொடுத்தார்.

போதை பொருள் பயன்பாட்டை எதிர்த்து உறுதிமொழியும் எடுக்க வைத்தார். விஜயின் இந்த செயல்களுக்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயை பாராட்டி வாழ்த்து செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

seeman

seeman

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன்,  உயர் கல்விக்கான உதவித்தொகையையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கனிசமான வாக்குகளை வாங்கியதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாராத்தை வாங்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விஜயுடன் கூட்டணியமைத்து சீமான் போட்டியிடுவாரா? என ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்போது சீமான் என் இளவல், அன்புத்தளபதி என குறிப்பிட்டு அனுப்பியுள்ள செய்தி தனிக்கவனம் பெற்றிருக்கிறது. இருவருமே திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு  வந்தவர்கள் என்பதால் இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிமுக அழைப்பு விடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் தனது ஆதரவை கொடுத்திருந்தார் முன்னதாக.

More in Latest News

To Top