ரோபோ மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க திட்டம் – தமிழகத்தில் எங்கு தெரியுமா?

ரோபோ மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க திட்டம் – தமிழகத்தில் எங்கு தெரியுமா?

கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ரோபோ மூலமாக உணவு மற்றும் மருந்து அளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஐ நெருங்கி வருகிறது.  இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ மூலமாக உணவு மற்றும் மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகமெங்கும் கொரொனா நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த முடிவால் அது குறைக்கப்படலாம் என தெரிகிறது.

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ரோபோ-க்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய சோதனை நடத்தினார். அதன் பின்னர் 10 ரோபோக்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளார்.