Latest News
ரெய்டில் சிக்குவாரா விஜய்?…அடித்துச் சொல்லும் பிரபலம்…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றார்.
கடந்த ஆண்டு வரை நடிகராகவே மட்டும் பார்க்கப்பட்டு வந்தவர் இப்போது தலைவராகவும் பார்க்கப்படுவதால் விழாக்களில் விஜய் பேசும் பேச்சுக்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த இதே விழாவில் மாணவ – மாணவியரிடையே போதைப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இன்றைய விழாவில் விஜய் பேசியது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வின் மீதான தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
மாநில மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் மாணவ சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு எதற்கு என்ற கேள்வியையும் முன் வைத்தார். அதே போல பேசும் போது ஒன்றிய அரசு என மத்தியில் ஆளும் அரசை சுட்டிக்காட்டி பேசினார்.
இது குறித்த தனது கருத்துக்களை முன்வைத்த ‘வலைப்பேச்சு’ அந்தணன் விஜய் பேசியிருப்பதை பார்க்கும் போது லீவில் சென்றுள்ள ஈடி, வருமான வரித்துறை அதகாரிகளை தட்டி எழுப்பி விடும் விதமாக இருந்ததாக சொன்னார்.
விஜயின் மீது ரெய்டு நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்படுமா? என உடனிருந்தவர் கேட்ட கேள்விக்கு அவர் இப்போது கட்சி துவங்கி விட்டார், அதனால் இது போன்ற நடக்க வாய்ப்பு குறைவே என்றார்.
வெறும் நடிகராக மட்டுமே இருக்கும் போது விஜய் இப்படி பேசியிருந்தால் கூட ரெய்டு விஷயங்களை பற்றி யோசிக்கலாம் ஆனால் இந்த முறை அது போல எதுவும் இருக்காது என அடித்துச் சொல்லும் விதாமாக பேசியிருக்கிறார் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.