மக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றி – ரஜினி திடீர் டிவிட் !

291

ரஜினி இரு தினங்களுக்கு முன்னர் பேசியதை பாமர மக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றி என டிவிட் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசியது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசை இல்லை என்றும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் ’மக்கள் மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும். அரசியலில் புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படும்போது நான் அரசியலுக்கு வருவேன்’ எனக் கூறினார். அவர் பேசியதில் இருந்து இது ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினி ‘அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில்  கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி’ எனத் தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

பாருங்க:  மாஸ்டர் இசை வெளியீடு – ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !