ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவை அடுத்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் அத்தியாவசிய தேவை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பேச்சுலர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மாலை அந்த நிறுவனங்கள் செயல்படக்கூடாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் காய்கறி மற்றும் ரேசன் பொருட்களை மட்டும் டோர் டெலிவரி செய்யலாம் எனவும், அவ்வாறு செய்கையில் non contactless யை பின்பற்ற வேண்டும்  என அறிவுறுத்தியுள்ளது.