Connect with us

திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!

Corona (Covid-19)

திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!

திருப்பூரில் மக்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப் பட்டுள்ளதற்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். ஆனாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லவேண்டியத் தேவை உள்ளது. இந்நிலையில் மக்களை பாதுகாக்கும் பொருட்டு திருப்பூர் கிருமிநாசினி சுரங்கம் என்ற அமைப்பை அம்மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

அதன்படி சந்தைக்கு அல்லது கடைகளுக்கு செல்லும் மக்கள் அந்த சுரங்கத்தைக் கடந்தே செல்லவேண்டும். அதில் இருந்து தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் கிருமிகளை அழித்து விடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கிருமிநாசினிகள் மூலம் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

More in Corona (Covid-19)

To Top