கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு குவிந்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகியுள்ளது. இது மக்களை மேலும் அச்சத்தில அழ்த்தியுள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின்  விலை பல மடங்கு அதிகமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.